Free Books
மனிதா! மனிதா! இயற்கை எழிலை அழித்து, செயற்கயால் நீ சேவை செய்தாலும் பூமியில் தோன்றும் பூகம்பமும், பாதளத்தின் தீக்குழம்பூம், பதில் சொல்லும்நாள் வெகு விரைவில்… விண்வெளிக்கு பாதை கண்டாய் -நீ விண்ணிலும் குடியிருப்பாய், மண்ணில் வாழ்வதற்கு தகுதியற்றவராய்..! ஆழ்கடலில் நீ செய்த ஆராட்சி அழிப் பேரலையாக அனைத்தையும் அள்ளியதே, மறந்து விட்டாயா மானிடா? ஆற்றிவின் அற்றலால் ஆயிரம் செய்கிறாய், ஆவி போனால் வெறும் கூடு நீ..! அமெரிக்கா வல்லரசானாலும்-சிறு வைரசுக்கு மருந்து எங்கே? ஆடுவதெல்லாம், ஆட்டம் […]
பெயர்;-யூ.ஜெரேபியன் பூவுலக மாந்தருக்கு என்றும் அவசியமானது கல்வியே வாழ்விற்கான நல்வழி காட்டி நிற்பதும் சிறந்தவனாய் வாழ வைப்பதும் கல்வியே பள்ளி பருவநிலை கண்டு பாலராய் ஒன்று சேர்ந்து-பின் சிறுவர்களாய் ஒன்றாய்க்கூடி மகிழ்ந்திருப்பதும் கல்வியாலே பல கல்வி மான்களை உருவாக்கி பல அறிவுரைகளை தருவதும் கல்வியே நல் வழி தவறா மனிதர்களாய்-ஞானிலம் போற்றிட வாழ்த்தி நிற்பதும் கல்வியே பாரிலுள்ள மனிதரிடையே சாதி,மதம் ஏழை,பணக்காரன் பாகுபாடின்றி ஒற்றுமையாய் ஒன்று சேர்த்து வளர்த்து நிற்பதும் கல்வியே […]
பெயர்;-லெரீஷியா விருட்சத்தின் கிளைகளில் இலைகள் தளிர்விட்டு வளர்வது போல வெண்ணுடை அணிந்த மாணக்கன் அறிவொளி வளர்ந்திட அடிதளம் இடுவது கல்வி! கல்வி ஒரு பயிராகும்! அதன் அறுவடை ஒரு வரமாகும்! கண்ணீர் ஒரு துளியாகும் அத்துளியே பின் அறிவுப்பெருக்காகும் நெஞ்சினிலே பொங்கிவரும் வஞ்ச நஞ்சினிலே! மாற்றமென போக்கிவிடும் தேனமுது கல்வி!
கரைபுரண்டோடும் கங்கையாய்! எம் கடைக்கண் திறந்து அறிவைப் பெருக்கும் தெய்வமாய்! அறியாமை எனும் மடைமையை அகத்திலிருந்து விளக்கியே அகிலம் சிறக்க வைத்திடும்! மண்ணிலும் அந்த விண்ணிலுமே வெற்றிநடை போட வைத்த பாலா தீபம்! கல்வி என்பது கஷ்டமில்லை அது உனக்கு கிட்டிய அதிஷ்டம் நிதமும் கற்பாய் கல்வியே அகிலம் சிறக்க வாழ்ந்திடுவாய்!
மனிதம் எனும் புனிதம் தட்டில் கிளுங்கிய நாணயக்குற்றிகளின் கச்சேரியில் அழுகையை தொலைத்த குழந்தையை கண்டு சிரித்த யாசகனும் ஓர் மனிதம் தான் பூஇதழ் உதிர்த்தி மகரந்தம் களையும் மாணவனின் கன்னம் கிள்ளி கண்டிக்கும் ஆசிரியனும் ஓர் மனிதம் தான் மூடர்கூடங்கள் கண்டபடி களைந்த கழிவுகள் சுமக்கும் கடமை தவறாத துப்பரவு பணியாளர்கள் ஓர் மனிதம் தான் கடமை எண்ணி வேகமெடுக்கும் அம்புலன்ஸ் வண்டியின் அலார ஒலியில் ஒதுங்கிவிடும் வண்டி ஓட்டுர்கள் ஓர் மனிதம் தான் நிலவு வானத்தை […]