Free Books

இயற்கையின் வெகுமதியை மனிதனே அறிவாயோ?

மனிதனின் கடமை இயற்கையை வளர்ப்பது என்பதை நீ அறிவாயோ?

விலங்குகளின் கொடிய விலங்கு மனிதனே

மனிதனின் உணர்வுகள் அனைத்தும் இயற்கை

அதில் கட்டுப்பாடு என்பது மனிதனின் செயற்கை

மனிதனின் கையில் இயற்கை இருந்தால்

உன் திருவிளையாடல்களை செய்தாயோ இயற்கைக்கு எதிராய்

உன் மூளை வளர்ச்சிக்கோ இயற்கை பறிபோனது

பஞ்சபூதங்கள் அடக்கமுட்பட்டாய்,அடங்க மறுத்ததும் சீரழித்தாய்..

 

இயற்கையின் உருவாக்கமே முழு பிரபஞ்சமும் என்பதை நினைக்க மறுத்தாய்

அதன் பின்விளைவு பலவும் பலமுறை கண்டாய்

உலகமே முன்பு கிராமம் என்றாய்,இன்று கிராமம் ஓர் உலகமென்பதை மறுக்கிறாய்…

இன்று மகிழூர்ந்து,தொடரூர்ந்து என பல வலம் கண்டாய்

அதிலும் மேலெழுந்து விண்ணூர்ந்து எனக் கண்டாய்

எல்லாவற்றிலும் எழுந்தது நச்சு வாயு என்பதை மறந்தாய்

இயற்கையின் அரும் பெரும் வளத்தை கொலை செய்தாய்..

நீர்,நிலம் குலைத்தாய்,காற்றிலே அசுத்தத்தை கலந்தாய்

கண்டது என்னடா மிச்சம்? செயற்கையால் இயற்கை அழிவதே மிச்சம்..

 

இயற்கையுடன் போரட யாரட முடியும்?

சீனாவின் சூழ்ச்சி வென்றதா? அமெரிக்காவின் ஆயிதங்கள் வென்றதா?

கண்டதெல்லாம் என்ன,மனிதனை மனிதன் தின்றதுவே மிச்சம்

மானிடனே நீ இன்னும் திருந்தவில்லை

என்றோ நீ விதைத்த வினையை இன்று நீயே அறுவடை செய்கிறாய்

”தன்வினை தன்னை சுடும்,ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” என்பதை

இனியும் மனித இனம் உணர மறுக்கிறது

அதுதான் மனிதனின் முடக்கம், இயற்கையின் சீற்றம்

இப்போது மனிதனை வென்றது இயற்கை அல்லவா

எப்போதும் மனிதனை வெல்வது இயற்கை தான் !!!

நன்றி