பெயர்;-ச.சசிரேகா
மனிதனை மனிதன் மதித்திருந்தால்
மனிதம் இங்கே நிலைத்திருக்கும்
ஜாதி மத பேதமென நாடகமாடும் நாட்டினில்
மனிதம் எங்கே தழைப்பது
மன்னர் எங்கே நிலைப்பது
துளை கொண்ட உலகில் துவன்ட மனிதம்
துச்சமென உயைரை காவு கொண்டது
நிலம் பிழந்து அவை எழுந்து உநிர் காவு கொண்ட போதும்
மனிதம் எழவில்லை மனம் மாறவில்லை
வாழ்க்கை எனும் நாடகம் எப்போதும் கலைந்துவிடும்
மனிதம் நிலைத்திருந்தால் வரலாற்றில் பேசப்படும்
உடல் கிழிந்து உயிர் பறிக்கும் ஆட்டம் ஓய்ந்து
நுண்ணுயிரால் உயிர் பிரியும் ஆட்டம் அரங்கேறியது
அரங்கேறிய ஆட்டத்தில் மனிதன் அடங்கினான்
இயற்கை மகிழ்ந்து புத்துயிர் பெற்றது
இருப்பவன்கை உயர்ந்தது இல்லாதவன்கை தாழ்ந்தது
மனிதம் மான்டதால் மன்னனும் மான்டார் அன்று
மாகாத்மாவும் மான்டார்
மனித்த்தின் மகத்துவத்தை மரணமும் பறைசாற்றும்
மனிதமே உன்னை மதித்திட வேண்டும்
புனிதமே என்றும் உன்னை நிலைத்திட வேண்டும்
மனிதனின் மனத்தில் மனிதம் குடிபுகட்டும்
கல்லறை தாண்டியும் அவன்புகழ் ஓங்கட்டும்