Free Books

பெயர்;-நிலவன்

தேடப்பட்டுக் கொண்டிருக்கும்

தெர்யக் கணியம் ஒன்றாயும்

சில நேரங்களில் சில இடங்களில்

சிட்டுக்குருவியின் சிறகசைப்பாயும்-அது

 

இயற்கை போடும் கணக்கில்

இலகுவில் அடைய முடியா

இறுதி விடையாய் அது

இரண்டொரு பேர்களின்

இமாலய முயற்சியின் பயனாய்

இந் நிலமெங்கும் பரவுகிறது

 

அடிக்கொரு தடவை

அதனை ஞாப்கப்படுத்தி விட

ஆங்காங்கே சில இடர்கள்

அரங்கேறித் தொலைந்திடும்

அவசியமும் இருகுகிறது

 

இன்னொரு இடர் வந்து

இருத்தலை அசைக்கும் வரை

அதிகமாய் அறியப்பட்டு

கொஞ்சமாய் உணரப்படும் அது

மனிதம் எனப்படுகிறது