மனிதம் எனும் புனிதம்
தட்டில் கிளுங்கிய நாணயக்குற்றிகளின்
கச்சேரியில் அழுகையை தொலைத்த குழந்தையை கண்டு சிரித்த யாசகனும் ஓர் மனிதம் தான்
பூஇதழ் உதிர்த்தி மகரந்தம் களையும்
மாணவனின் கன்னம் கிள்ளி கண்டிக்கும்
ஆசிரியனும் ஓர் மனிதம் தான்
மூடர்கூடங்கள் கண்டபடி களைந்த கழிவுகள்
சுமக்கும் கடமை தவறாத
துப்பரவு பணியாளர்கள் ஓர் மனிதம் தான்
கடமை எண்ணி வேகமெடுக்கும் அம்புலன்ஸ்
வண்டியின் அலார ஒலியில் ஒதுங்கிவிடும்
வண்டி ஓட்டுர்கள் ஓர் மனிதம் தான்
நிலவு வானத்தை ரசித்து இளங்காற்றை
நுகர்ந்து
மணலில் கோலம் இட்டு தன் உள்உணர்வுடன்
சரி பிழை கதைப்பும் ஓர் மனிதம் தான்