ஒரு காலத்தில் யுத்தம் இன்னொரு காலத்தில்
இயற்கையின் சீற்றம்
ஒவ்வாது மனிதத்தை மாற்றி அமைக்கின்ற
பேரழிவுகள்
பேரழிவுகளினால் பெருமை படைத்த மனிதம்
பெருங்கேட்டிற்குள்ளாகி வல்லமை
இழக்கிறது
அன்னையும் பிதாவும் கண்கண்ட தெய்வம்
அந்தவாக்கு பொய்யாகி விட்டாதே இக்காலம்
ஆடம்பரவாழ்வு தன்னை விரும்பிப்பிள்ளைகள்
தொலைத்தூரத்தேசம்
தந்தை தாயாரோ வயோதிப இல்லம்-மனிதம்
எங்கே
அறியாமை இருளினை நீக்கி அறிவினைத்
தருகின்ற மனிதப்பண்பு தலைமீறி
அந்தகார சூழ்நிலை இன்று தலைதூக்கி
தாண்டவம் ஆடுகின்றது
இப்பூமியினில்!