பரிதாப சிந்தையினை
தூரநிறுத்தியபடி-பணத்தை
தேடுகின்ற பந்தயத்தில்
வயிறுபுடைத்து செரிக்க நடப்போர் மத்தியில்
வயிறு ஒட்டிய வறுமையை பாரமல் நீ
சென்றது தான் எங்கே?
எங்கே நீ எங்கே தான் போய் விட்டாய்
இன்றய உலகில்?
புறம் தவிர்த்து நீ அறங்கள் பல செய்து
நல்ல அன்பினை நிலைநிறுத்தி
மனிதராய் பிறந்த நாம்
மண்ணில் வாழும் காலம்வரை
மனிதம்தனை வளர்த்திடுவோம்
ஒன்றாய் என்றென்றுமினி…