Free Books

பெயர்;-

மனிதம் மாண்டது என

பலர் மார்தட்டிப் பேசினும்

மடிந்து போகமல் -எங்கோ

சில இதயங்களில் துளிர்விடுகிறது

இன்றும் மனிதம்..!

இதற்கு சான்றுதான்

எத்தனை எத்தனை..!!

எங்கோ பாலகன் ஆழ்துளையில்

சிக்குண்ட வேளையில்

ஆர்ப்பரித்தது எத்தனை மனங்கள்..

காரிருள் சூழ்ந்த கனமழைதனில்

கரம் கோர்த்து இணைந்த

மனிதங்கள் தான் எத்தனை..!

இன்றும் ஊரடங்கிய போதும்

வறியோரை வந்து சேர்ந்த

உதவிக் கரங்கள் தான் எத்தனை..!

மனிதமும் மானுடமும் சாகவில்லை

செத்துவிட்டதாய் எண்ணுகின்ற

மெத்தனப் போக்கு மாறுதல் நன்று!!!