Free Books

மனிதமே உனக்கு

அகராதியில் பொருள் தேடினேன்

அகத்தின் அடியில் ஆழப்பட்டாய் என

அடிகுறிப்பு மட்டுமே உள்ளது

நானும் தேடுகிறேன் நெடுநாட்களாய்

மனிதனிடத்தில் மனித நேயத்தை

விண்வெளியில் தொலைத்திருப்பானா?-அவன்

விண்ணைக் குடைந்து வின்னம் செய்வதால்

ஆழ்கடலில் தொலைத்திருப்பானா?-அவன்

தினம்

ஆராட்சி அரங்கேறுவதால்

நந்திக் கடலில் நீந்தியும்

வன்னிப் பெருநிலத்தில் வருந்தியும்

தொலைந்திருந்தால் மனிதமே-நீ

திரும்பி வந்துவிடு இங்கு -சிலர்

அருந்தக் காத்திருக்கின்றனர்