பெயர்-டிலக்க்ஷனா
உடல் கொண்டு உயிர் கொண்டு-ஜயகோ!மறந்து விட்டேன்
பகுத்தறிவும் கொண்டு நடமாடும் சதைபிண்டமாய்-சதை பிண்டமா!!!
அல்லவே அவன் தான் மனிதன்,என என் செவிக்குள் வீழ்ந்து
தீர்கமாய் கேட்பினும் ”அவன் மனிதனல்ல” என உரக்க ஓலமிடுவேன்.
சுலங் கொண்டு சுற்றும் பூமியிலே-கண்ணெதிரே
கையேந்தும் பிஞ்சுக் கைகளை கண்ட பின்னும்
மறந்து போன மனிதத்தின் பற்றாக்குறையினால் அவற்றை
கடந்து போகிறானே – அவனா மனிதன்…இல்லை நிச்சயம் இல்லை.
அநியாயமாய் பலி கொடுத்த அன்பு கணவர்களுக்காய்
நியாயம் கேட்கப் போன எங்கள் கண்ணகிகள்
தலை தலை திருகி தீயிட முன்னே முலை திருகி தீயிட்டனார்…
அன்றே கருகி போனதையா மனிதம்…..
கொரோனா எனும் கொடியவனை தன்னுள் நிறுத்தி
தன்னுயிர் நீர்த்து எம் உயிர் காத்துவனின் புகலுடலை
நல்லடக்கம் செய்ய நாலு அடி நிலம் கொடுக்க மறுத்த
அக்கணமே புதைந்து போனதையா மனிதம்…..
நான்கு நாள்கள் நடை பிணமாய்- அவசரமாய் ஆதங்கத்துடன்
ஜந்து ஆயிரமாவது பெற்று ஜந்து ஜீவன்களின் அரை வயிற்றை நிரப்ப
ஓடோடி வந்தவனை கால்கடுக்க காக்க வைத்து அந்தி சாயும் வேளையில்
” உனக்கில்லை காசு” என்ற ஒற்றை வார்த்தையில் அடிபட்டு போனாதையா மனிதம்…
தினக்கூலி வேலை இல்லை – தினம் விழித்தெழும்
அன்றைய நாள் முழுக்க வெறும் தேநீரில் தோய்த்துண்டு ஆற
ஒரு துண்டு பாண் கேக்க போகும் உன்னவரை – வள்ளல் ஒருவர்
கொடுக்கிறேன் என கூட்டிச் சென்று கொடுக்கின்ற – ஒருகிலோ கோதுமைக்கு…
ஓராயிரம் செல்பிகள் – வாங்கியவன் உடல் குறுக
கொடுத்தவனின் பளிச்சுடும் கேமராக்களில்- வறியவனின்
கண்ணீரும் காணாமல் போக – முகபுத்தங்களில் லைக்குகளும் கமெண்ட்டுகளும்
அள்ளி வழங்கினார் மனித நேயம் மிக்க அன்பர்கள்
மரித்து போனாதையா இவ்வுலகில் மனிதநேயம்- என்று மாறுமோ இம் மனங்கள்
மலிந்து போனா மனங்களில்- மரமாய் போன மனிதம்
இல்லாத மனிதம் இல்லையவன் மனிதன்- துளிர்க்கும் மீண்டும்
அன்று வரை வெறும் சதைப்பிண்டங்களாய்……