கொரோனா விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்த எமது கல்வி நிலையத்தால் நடாத்தப்பட்ட 2வது போட்டியான கவிதைப்போட்டியில் கிட்டத்தட்ட 150க்கு மேற்ப்பட்ட போட்டியாளர்கள் பங்குபெற்றியிருந்தார்கள். அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இப்போட்டியில் எமது மாகாண மாணவர்களை தாண்டி வேறு பல மாகாணங்களில் இருந்து மாணவர்கள் போட்டியில் பங்கேற்றியது எமக்கு மேலும் மகிழ்ச்சியை தருகின்றது. இவ்வாறு எமது செயற்த்திட்டங்களுக்கு எம்மோடு கைகோர்த்து நிற்ப்பதில் மிக மிக முக்கியமானவர்கள் நண்பர்களே அவ்வாறான எம் நண்பர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். அதனை தொடரந்து இப்போட்டி பரிசுத்தொகைக்கு எம்மோடு கைகோர்த்த சிறி அண்ணா , கஜீபன் ஆசிரியர், பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர், செந்தூரன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
அத்துடன் நடுவர்களாக கடமையாற்றிய விரிவுரையாளர்களுக்கும் எமது நன்றிகள்