Free Books

பெயர்;-யூ.ஜெரேபியன்

பூவுலக மாந்தருக்கு

என்றும் அவசியமானது கல்வியே

வாழ்விற்கான நல்வழி காட்டி நிற்பதும்

சிறந்தவனாய் வாழ வைப்பதும் கல்வியே

 

பள்ளி பருவநிலை கண்டு

பாலராய் ஒன்று சேர்ந்து-பின்

சிறுவர்களாய் ஒன்றாய்க்கூடி

மகிழ்ந்திருப்பதும் கல்வியாலே

 

பல கல்வி மான்களை உருவாக்கி

பல அறிவுரைகளை தருவதும் கல்வியே

நல் வழி தவறா மனிதர்களாய்-ஞானிலம்

போற்றிட வாழ்த்தி நிற்பதும் கல்வியே

 

பாரிலுள்ள மனிதரிடையே சாதி,மதம்

ஏழை,பணக்காரன் பாகுபாடின்றி

ஒற்றுமையாய் ஒன்று சேர்த்து

வளர்த்து நிற்பதும் கல்வியே

 

மலையெனப் பெற்ற செல்வம்

வெள்ளத்தால் கரைந்து போகும்

உயர்வினைக் காட்டும் கல்வியே

என்றும் செல்வச் செழிப்பை தரும்

 

வையகமும் வானகமும் வாழ்த்திட

உயர்வு தருவது கல்வியே

மானிடர் அனைவரும் வாழ்ந்திட

இன்பம் தருவது கல்வியே.