கரைபுரண்டோடும் கங்கையாய்!
எம் கடைக்கண் திறந்து
அறிவைப் பெருக்கும் தெய்வமாய்!
அறியாமை எனும் மடைமையை
அகத்திலிருந்து விளக்கியே
அகிலம் சிறக்க வைத்திடும்!
மண்ணிலும் அந்த விண்ணிலுமே
வெற்றிநடை போட வைத்த
பாலா தீபம்!
கல்வி என்பது கஷ்டமில்லை
அது உனக்கு கிட்டிய அதிஷ்டம்
நிதமும் கற்பாய் கல்வியே
அகிலம் சிறக்க வாழ்ந்திடுவாய்!