மனிதா!  மனிதா!

இயற்கை எழிலை அழித்து, செயற்கயால் நீ சேவை செய்தாலும்

பூமியில் தோன்றும் பூகம்பமும், பாதளத்தின் தீக்குழம்பூம்,

பதில் சொல்லும்நாள் வெகு  விரைவில்…

 

விண்வெளிக்கு பாதை கண்டாய் -நீ

விண்ணிலும் குடியிருப்பாய், மண்ணில் வாழ்வதற்கு தகுதியற்றவராய்..!

ஆழ்கடலில் நீ செய்த ஆராட்சி

அழிப் பேரலையாக அனைத்தையும் அள்ளியதே, மறந்து விட்டாயா மானிடா?

ஆற்றிவின் அற்றலால் ஆயிரம் செய்கிறாய், ஆவி போனால் வெறும் கூடு நீ..!

அமெரிக்கா வல்லரசானாலும்-சிறு

வைரசுக்கு மருந்து எங்கே?

ஆடுவதெல்லாம், ஆட்டம் முடிந்தால்

அடங்கிப் போவாய் ஆறடி நிலத்தில்

இப்போது சொல் இயற்கையை-நீ

இறுதியில் வென்றாயா?