பெயர்;-
நெஞ்சுக் கூட்டில் வெப்பச் சுகத்தை
உணர வைக்கும் இயற்கை தேவதையே!
சீற்றமே கொண்டாலும் என்றுமே
எங்கள் பேரழகி நீமானம்மா
உன் செயலால்தானேயம்மா இந்த
உலகம் விந்தையால் விரிகின்றன
கடவுளின் கைவண்ணம் நீ
என்றாலும் உன்னை அழிக்கும்
பாவியின் இனம் நானம்மா!
பாறையின் அடியில் கூட இருக்கும் அந்த
ஈரம் சில மனித உள்ளங்களில் இல்லையம்மா!
உன்னை அழிக்க மோகம் கொண்டது
மனித இனம் -அதை வெல்ல நினைத்தது
உந்தன் இனமம்மா!
நீங்காய் பிணியொன்று வந்தது
இத்தருணம்-அதை தடுக்க முடியாமல்
போகுது பல மரணம்
சேர்ந்த தேன் துளிகள் நொதிவது போல
பல ஊர்களும் இன்று மாயானமாகுதம்மா!
வளர்ந்து விட்ட நாடெல்லாம்
தளர்ந்து கெட்டு கிடக்குதம்மா!
சடலம் புதைக்க கூட இங்கு
யாருமில்லை இடுகாட்டில்
சினம் கொண்டு எம்மேல் சீறாதேயம்மா
மனித பாவத்தாலே கடவுளின் சாபம்
பெற்றோம்-உன் கோபத்தாலே
கொரோனாவின் அம்பை பெற்றோம்
மனிதனை வென்றாய் மனிதனை வென்றாய்
எனது இனத்தை கூண்டில் அடைத்தாய்
உனக்கென நீயே சுதந்திரம் பெற்றாய்